Skip to content

சொல் பொருள் விளக்கம்

(பெ) 1. கழுத்தில் அணியும் அணிகலன் – மணிவடம், பூமாலை, முத்துமாலை, வளையம், 2. ஆரக்கால், 3. சந்தனம் – மரம், குழம்பு 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

necklace, garland, neckring

 spoke of a wheel

sandalwood tree, paste

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஒண் நுதல் விறலியர்க்கு ஆரம் பூட்டி – பதி 48/2

ஒள்ளிய நெற்றியையுடைய விறலியர்க்கு பொன்னரிமாலைகள் அணிவித்து

ஆரம் சூழ்ந்த அயில் வாய் நேமியொடு – சிறு 253

ஆரக்கால்களைச் சூழ்ந்த கூரிய வாயையுடைய சூட்டினையுடைய சக்கரத்தோடே

குட மலைப் பிறந்த ஆரமும் அகிலும் – பட் 188

மேற்குமலையில் வளர்ந்த சந்தனமரமும், அகில் மரமும்

ஆரம் நீவிய அணி கிளர் ஆகம் – நற் 344/6

சந்தனக்குழம்பு பூசிய அழகு விளங்கும் மார்பு

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *