சொல் பொருள்
(பெ) கடினமாதை பாதை, அரிய வழி,
(ஆர் + இடை = ஆரிடை, கடினமான இடைவெளி)
சொல் பொருள் விளக்கம்
அரிய வழி; ஆவது ஆறலைப்போரும் ஊறுசெய் விலங்கும் உடைத்தாய் ஏற்றிழிவும் கவலைச் சின்னெறியுமாய் இருப்பது. (சிலம்பு. 11: 68. அடியார்.)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Difficult or rugged path
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நிழல் ஆன்று அவிந்த நீர் இல் ஆரிடை கழலோன் காப்ப கடுகுபு போகி – குறு 356/1,2 நிழல் முற்றும் இல்லாமற்போன நீர் இல்லாத அரிய வழியில் கழலையணிந்தவன் காக்க, விரைந்து சென்று
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்