சொல் பொருள்
(பெ) 1. வெள்ளம், 2. கடல், 3. மிகுந்த ஆரவாரம் (ஆர்+கலி)
சொல் பொருள் விளக்கம்
1. வெள்ளம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
floods, sea, loud noise
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென ஆர்கலி முனைஇய கொடும் கோல் கோவலர் – நெடு 2,3 பொய்க்காத மேகங்கள் புதிய மழையைப் பெய்ததாக வெள்ளத்தை வெறுத்த வளைந்த கோலையுடைய இடையர்கள் இரும் கழி இழிதரும் ஆர்கலி வங்கம் – புறம் 400/19 கருமையான கழியின் வழியாக வந்திறங்கும் கடல் ஓடங்கள் தீம்பெயல், காரும் ஆர்கலி தலையின்று – அகம் 54/3 இனிய மழையை, மேகமும் மிக்க ஒலியுடன் பெய்தது
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்