சொல் பொருள்
(வி) 1. ஒலி, 2. களிகூர், 3. ஆடு
சொல் பொருள் விளக்கம்
1. ஒலி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
make sound, rejoice, dance
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மா நனை கொழுதி மகிழ் குயில் ஆலும் – நற் 9/10 மாமரத்தின் அரும்பைக் கோதி மகிழ்கின்ற குயில்கள் கூவிவிளையாடும் வெண் நுதல் கம்புள் அரிக்குரல் பேடை தண் நறும் பழனத்து கிளையோடு ஆலும் – ஐங் 85/2 வெள்ளை நெற்றியையுடைய சம்பங்கோழியின் அரித்தெழும் ஓசையையுடைய பெட்டைக்கோழி குளிர்ந்த நறிய பொய்கையில் தனது இனத்தோடு மகிழ்ந்து ஆரவாரிக்கும் மஞ்ஞை ஆலும் மரம் பயில் இறும்பின் – பெரும் 495 மயில்கள் ஆடும் மரங்கள் நிறைந்த குறுங்காட்டில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்