Skip to content

சொல் பொருள்

(பெ) பொருளீட்டும் முயற்சி

சொல் பொருள் விளக்கம்

பொருளீட்டும் முயற்சி

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

manly effort or enterprise to earn money

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மதர்வை நல் ஆன் மாசு இல் தெண் மணி
கொடும் கோல் கோவலர் குழலோடு ஒன்றி
ஐது வந்து இசைக்கும் அருள் இல் மாலை
ஆள்வினைக்கு அகன்றோர் சென்ற நாட்டும்
இனைய ஆகி தோன்றின்
வினை வலித்து அமைதல் ஆற்றலர்-மன்னே – நற் 69/7-12

பெருமிதம் கொண்ட நல்ல பசுக்களின் குற்றமற்ற தெளிவான மணியோசை
வளைந்த கோலையுடைய கோவலரின் குழலோடு சேர்ந்து
மெல்லிதாக வந்து ஒலிக்க, இவ்வாறான இரக்கமற்ற மாலைப்பொழுது
பொருளீட்டும் முயற்சியால் பிரிந்து சென்றோர் சென்ற நாட்டிலும்
இப்படியே தோன்றுமாயின்
தன் செயலில் உறுதிகொண்டு தங்கியிருக்க அவரால் முடியாது.

ஆள்வினை பிரிந்த காதலர் நாள் பல
கழியாமையே அழி படர் அகல
வருவர் – அகம் 255/7-9

பொருளீட்டும் முயற்சிபற்றி நம்மைப் பிரிந்து சென்ற தலைவர், பல நாள்
தாழ்க்காது, நமது மிக்க துன்பம் நீங்க
விரைந்து வந்துறுவர்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *