சொல் பொருள்
(பெ) 1. பத்திரம், 2. கடைத்தெரு
சொல் பொருள் விளக்கம்
1. பத்திரம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
document, record
Market
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கயிறு பிணிக் குழிசி ஓலை கொண்மார் பொறி கண்டு அழிக்கும் ஆவண மாக்களின் – அகம் 77/8 கயிற்றால் பிணிக்கப்பட்ட குடத்திலுள்ள ஓலையை எடுத்துக்கொள்வதற்கு அக் குடத்தின் மேலிட்ட இலச்சினையை ஆய்ந்து நீக்கும் ஓலை ஆயும் மக்களைப் போன்று மல்லல் ஆவணம் மாலை அயர – நெடு 44 வளப்பத்தையுடைய அங்காடித்தெருவெல்லாம் மாலைக்காலத்தைக் கொண்டாட
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்