சொல் பொருள்
(பெ) ஒரு மரம்,
சொல் பொருள் விளக்கம்
ஒரு மரம், இது செழுமையுடன் அடர்ந்திருக்கும் தழைகளைத் தலையில் உடையதாகும்.
சவுக்குமரம் என்பர்.
ஒரு மரம்; இது செழுமையுடன் அடர்ந்திருக்கும் தழைகளைத் தலையில் உடையதாகும். என்பது, ‘துன்னிய, ஈர நெஞ்சத் தார்வலாளர், பாரந்தாங்கும் பழைமை போல, இலைக் கொடிச் செல்வமொடு தலைப்பரந் தோங்கிய, கணைக்கால் இகணை” என்னும் பெருங்கதையால் பெறப்படும்.
(அகம். 131. வேங்கட விளக்கு.)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a tree
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விசும்பு உற நிவந்த மா தாள் இகணை பசும் கேழ் மெல் இலை அருகு நெறித்து அன்ன – அகம் 131/1,2
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்