சொல் பொருள்
(வி) 1. தாழ்ந்துவிழு, 2. தாழ ஒலியெழுப்பு 3. பரப்பிவிடு
சொல் பொருள் விளக்கம்
1. தாழ்ந்துவிழு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
descend, sound as a drum, spread over
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஐது வீழ் இகு பெயல் அழகு கொண்டு – சிறு 13 மெல்லிதாகக் கீழே இறங்கும் மேகங்களின் அழகைக் கொண்டு கண கலை இகுக்கும் கறி இவர் சிலம்பின் – அகம் 112/14 கூட்டமான மான்கள் தாழ ஒலிக்கும் மிளகுக்கொடிகள் படரும் மலைச்சாரலில் தருகணாளர் குடர் தரீஇத் தெறுவரச் செம் செவி எருவை அஞ்சுவர இகுக்கும் – அகம் 77/10,11 இறந்துபட்ட வீர மறவர்களின் குடலை வெளியே இழுத்துக் குவியலாக சிவந்த செவியையுடைய பருந்து அச்சம்தோன்றப் பரப்பிவிடும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்