சொல் பொருள்
இக்கன்னாப்போடல் – தடைப்படுத்தல், நிறுத்திவிடல்
சொல் பொருள் விளக்கம்
ஒருவரிடம் ஓருதவியைப் பெறுதற்கு முயன்று, அது வெற்றி தரும் அளவில் ஒருவரால் தடுக்கப்பட்டு நின்று விடுவதுண்டு. அந்நிலையில் உதவி பெறாது ஒழிந்தவர் “அவர் இக் கன்னாப் போட்டு விட்டார். அவர் இக்கன்னாப் போட வில்லையானால் எப்பொழுதோ நடந்திருக்கும்” என்பார். இக்கன்னா என்பது தடுத்தல் பொருளில் வருவது, முற்றுப் புள்ளி வைத்தல் என்பது நிறுத்துதலைக் குறிப்பதுபோல் இக்கன்னாவும் நிறுத்துதலேயாம், இக்கன்னா என்பது மெய் யெழுத்து. அதிலும் வல்லினப் புள்ளியில் முதல் எழுத்து. அதனால் அவ்வெழுத்தைச் சுட்டி நிறுத்தப்பட்டதைக் குறிக்கும் வழக்கம் உண்டாயிற்றாம். ‘க்’ முதலிய வல்லினம் சொல்லின் இறுதியில் வராது; வரக் கூடாது என்பது அறிக.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்