Skip to content

சொல் பொருள்

(வி) – விசைப்போடு திற, பிள, இடம்பெயர்

சொல் பொருள் விளக்கம்

விசைப்போடு திற

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

forcibly open, crack, break, dislodge

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

செப்பு இடந்து அன்ன நாற்றம் தொக்கு உடன் – நற் 337/6

செம்பின் மூடியை வலியத்திறந்ததைப் போல் மணம் ஒருங்கு சேர்ந்து

இடரிய ஏற்று எருமை நெஞ்சு இடந்து – கலி 101/25

உயிரினங்களை அழிக்கும் எருமைக்கடா மீது ஏறிவரும் கூற்றுவனின் நெஞ்சைப் பிளந்து

உளியம் சிதலை
ஒருங்கு முயன்றெடுத்த நனைவாய் நெடுங்கோடு
இரும்பு ஊது குருகின் இடந்து இரை தேரும் – அகம் 81/1-5

கரடியானது,கறையான்கள்
தம் நனைந்த வாயால் சேர்ந்து வருந்திக் கட்டிய நெடிய உச்சியை
இரும்பு உலையில் ஊதும் துருத்தியைப் போல் மூச்சுவிட்டு இடம்பெயர்த்து இரைதேரும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *