Skip to content

சொல் பொருள்

(வி) 1. தகர், துகளாக்கு, 2. இடியோசை செய்,

2. (பெ) 1. பொடிசெய்யப்பட்டது, 2. இடியோசை

சொல் பொருள் விளக்கம்

பார்க்க : பொருள்பிணி

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

collapse, demolish, pound, thunder, powder, thunder

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இடி சுர நிவப்பின் இயவு கொண்டு ஒழுகி – மலை 20

கல்லை இடித்த சுரத்தின் உச்சியில் உள்ள வழியில் சென்று

கார் இடி உருமின் உரறு முரசின் – பதி 33/10

கார்காலத்தில் இடிக்கும் இடியேற்றைப் போல முழங்கும் முரசின்

இடி கலப்பு அன்ன நறு வடி மாவின் – மலை 512

பொடியான கற்கண்டின் கலப்பை ஒத்த நறிய வடுக்களையுடைய மாவினது

இடி என முழங்கும் முரசின் – புறம் 17/39

இடியைப் போல முழங்கும் முரசினது

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *