சொல் பொருள்
இடிபடுதல் – வசைக்கு ஆட்படுதல்
சொல் பொருள் விளக்கம்
ஒருவருக்கு ஒருவகைப் பழக்கம் இருக்கும். அப்பழக்கத்திற்கு மாறாக ஒன்றைச் செய்தால் அவருக்குப் பிடிப்பது இல்லை. மாறாகச் செய்ததைப் பொறுத்துக் கொள்ளும் மனமும் அவர்க்கு இல்லை. அதனால் கண்டபடி வசை மொழிதல் கண்கூடு. “அவரிடம் அதைச் சொல்லிவிட்டு நம்மால் இடிபட முடியாது” “அவரிடம் அதைச் செய்தால் அவ்வளவுதான் ; நம்மால் இடிபட்டு முடியாது” என்பர். இடிபடுதல் என்பது கம்பியால் குத்துதல் போலவும், உலக்கையால் இடித்தல் போலவும் செய்வதாம். இடி என்பது இடித்துக் கூறும் வசை! இடித்துக் கூறும் அறிஞர் உரைபோல்வதன்று. இது உணர்ச்சி வயப் பட்டவர் வசைமொழி.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்