சொல் பொருள்
இடிவிழுதல் – கொடுந்துயர்ச் செய்தி கேட்டல்
சொல் பொருள் விளக்கம்
முகில் மோதுங்கால் மின் வெட்டலும் குமுறலும் இடி விழுதலும் எவரும் அறிந்தது, இடி தாக்காமல் இருப்பதற்காக இடிதாங்கி அமைப்பதும் காணத்தக்கதே. இங்கே இடிவிழுதல் என்பது, அவ்விடியால் அடையும் துன்பம் போன்ற துன்பம் அடைவதே என கூறப்படுகிறது. குடும்பத்தின் பாதுகாப்பாம் தந்தையோ, தாயோ திடுமென இயற்கை எய்திவிட்டால், குடும்பம் இடி விழுந்ததுபோல் மீளாத்துயருக்கு ஆளாகும். அதனை “இந்த இடியைத் தாங்க முடியுமா?” “பேரிடி இதற்குமேல் என்ன இருக்கிறது” எனக் குடும்ப நிலை அறிந்தோர் வருந்திக் கூறும் உரையால் இடி விழுதல் என்பதன் பொருள் புலப்படும்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்