சொல் பொருள்
இடுக்கு – மிகக் குறுகலான வழியும் , தெருவும்.
முடுக்கு – மிகக் குறுகலானதும் பல இடங்களில் முட்டி முட்டித் திரும்புவதும் ஆகிய வழியும் தெருவும்.
சொல் பொருள் விளக்கம்
இடுங்கிய கண்ணாக்கிவிட வல்லிதாம் வறுமை ‘இடுக்கண்’ எனப்பட்டதனை எண்ணுக. இடுக்கிப் பொறியை எண்ணினால் இதன் பொருளமைதி நன்கு தெளிவாம். முக்குத் தெரு, முடுக்குத் தெரு என்பவனைற்றையும், முட்டி, முடங்குதல் என்பவற்றையும் எண்ணுக.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்