சொல் பொருள்
(பெ) துன்பம்,தவிர்க்க முடியாத நச்சுத்துயர்
சொல் பொருள் விளக்கம்
இடும்பை என்ற சொல்லின் முதற் பகுதி இடுக்கண், இடுக்கம் ஆகிய சொற்களின் முற்பகுதியான ‘இடு’ என்பதே. இது தவிர்க்க முடியாத, தப்ப முடியாத கடுந் துன்பப் பொறியைக் குறிப்பதாகும். சொல்லின் பிற்பகுதியான ‘பை’ நஞ்சைக் குறிக்கும். தவிர்க்க முடியாத நச்சுத்துயர் என்பதே இதன் சொற்பொருள் ஆகும். (திருக்குறள். மணிவிளக்கவுரை. ஐ. 276 – 177.)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
suffering
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நாடன், இரவின் வரூஉம் இடும்பை நாம் உய – நற் 393/8 காதலன், இரவில் வருதலாகிய துன்பத்திலிருந்து நாம் பிழைக்கவேண்டி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்