சொல் பொருள்
(பெ) இடைக்கட்டு,
தெரு ஒழுங்குக்கு இடையே கழிதலால் இடைகழி
இடையிற் கழிந்து செல்லும் நடை
சொல் பொருள் விளக்கம்
(1) தெரு ஒழுங்குக்கு இடையே கழிதலால் இடைகழி. (சிலம்பு 10:27. அரும்பத… அடியார்.)
(2) இடையிற் கழிந்து செல்லும் நடை. இடை கழி – ரேழி (கொச்சைத்திரிபு). (வடமொழி வரலாறு.89.)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Intermediate space between the entrance door and the second doorway in an Indian old house
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புழை வாயில் போகு இடைகழி மழை தோயும் உயர் மாடத்து – பட் 144,145 சிறுவாசலையும், பெரியவாசலையும், நீண்ட நடை(இரேழி)களையும் உடைய மேகங்களை எட்டித்தொடும்(அளவுக்கு) உயரமான மாடத்தில் விண்பொரு நெடும் குடை கொடி தேர் மோரியர் திண் கதிர் திகிரி திரிதர குறைத்த உலக இடைகழி அறை வாய் – புறம் 175/6-8 விசும்பைத் தோயும் நெடிய குடையினையும் கொடி அணிந்த தேரினையும் உடைய மோரியரது திண்ணிய ஆரம் சூழ்ந்த சக்கரம் இயங்குவதற்கு வெட்டிக் குறைக்கப்பட்ட மலைக்கு அப்பாலாகிய உலகத்திற்குக் கழியும் இடைகழியாகிய அற்றவாயின்கண்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்