சொல் பொருள்
இணக்கம் – ஒருவர் குணத்திற்குத் தக இணங்கிப் போதல்.
வணக்கம் – பணிந்த மொழியும் வணங்கிய கையுமாக அமைந்து போதல்.
சொல் பொருள் விளக்கம்
இணக்கத்தால் ஒருவரை வயப்படுத்தலாம்; வணக்கத்தாலும் வயப்படுத்தலாம்; இணக்க வணக்கம் இரண்டும் உடைய ஒருவர் எவரையும் வயப்படுத்துதல் எளிமையாம்.
இணக்க வணக்கம் உண்மையாக இல்லாத நிலையில் அவற்றால் விளைந்துள்ள தீமைகளுக்கு எல்லையே இல்லையாம்! “தொழுத கையுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் அழுத கண்ணீரும் அனைத்து”என வள்ளுவர் எச்சரித்தார். (குறள் 828)
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்