சொல் பொருள்
(பெ) 1. இல்லாமை, 2. வறுமை
சொல் பொருள் விளக்கம்
1. இல்லாமை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Total negation of existence, being without something
poverty
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நன் நுதல் விருந்து இறைகூடிய பசலைக்கு மருந்து பிறிது இன்மை நற்கு அறிந்தனை சென்மே – நற் 247/7-9 நல்ல நெற்றியில் புதிதாய் வந்து நிலையாய்க் குடியிருக்கும் பசலைக்கு மருந்து வேறு இல்லை என்பதை நன்கு அறிந்தவனாகச் செல்வாயாக! துடி அடி அன்ன தூங்கு நடை குழவியொடு பிடி புணர் வேழம் பெட்டவை கொள்க என தன் அறி அளவையின் தரத்தர யானும் என் அறி அளவையின் வேண்டுவ முகந்துகொண்டு இன்மை தீர வந்தனென் – பொரு 125-129 ‘துடி போலும் அடிகளையும் அசைந்த நடையினையும் உடைய கன்றுகளுடன், 125 பிடிகளைக் கூடின களிற்றியானைகளையும், (நீவிர்)விரும்பிய ஏனையவற்றையும் கொள்வீராக’ என்று தான் அறிந்த அளவால் தரத்தர, யானும் யான் அறிந்த அளவில் (எனக்கு)வேண்டுவனவற்றை வாரிக்கொண்டு, (என்)இல்லாமை (முற்றிலும்)அற்றுப்போக வந்தேன்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்