சொல் பொருள்
(வி) ரீங்காரம் செய்
சொல் பொருள் விளக்கம்
ரீங்காரம் செய்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
buzz
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வண்டு வகைகளான சுரும்பு, தும்பி, ஞிமிறு ஆகியவை பறக்கும்போது எழுப்பும் ஒலி. வண்டு இமிர் சுடர் நுதல் குறு_மகள் – ஐங் 254/3 சுரும்பு இமிர் கானம் நாம் பாடினம் பரவுதும் – கலி 106/48 தொடிமகள் முரற்சி போல் தும்பி வந்து இமிர்தர – கலி 36/4 வரி ஞிமிறு இமிரும் மார்பு பிணி மகளிர் – பதி 50/18 buzzing என்பதற்குரிய தூய தமிழ்ச்சொல் இமிர்தல். வீணையின் ஒரு நரம்பை இழுத்து விட்டால் ‘டொய்ங்ங்ங்ங்ங்ங்..’ என்று ஒலிக்குமே அதுவும் இமிர்தல்தான். கை கவர் நரம்பின் இம்மென இமிரும் – குறி 147 இந்த அடி இமிர்தலோடு அதன் ஒலிக்குறிப்பையும் குறிப்பிடுவதைக் கவனியுங்கள். சில வேளைகளில் குழல், தூம்பு போன்ற துளைக் கருவிகள் மெல்லிய ஓசை எழுப்புவதுவும் இமிர்தல் எனப்பட்டுள்ளது. இளி பயிர் இமிரும் குறும் பரம் தூம்பொடு – மலை 7 கை வைத்து இமிர்பு குழல் காண்குவோரும் – பரி 19/41
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்