Skip to content

சொல் பொருள்

(வி) பேசு, சொல், அழை, இவற்றைப்போல் ஒலி எழுப்பு,

சொல் பொருள் விளக்கம்

பேசு, சொல், அழை, இவற்றைப்போல் ஒலி எழுப்பு,

காலைப்பொழுது விடிகிறதை சேவல் கூவித் தெரிவிப்பது இயம்புதல்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

speak, call, sound as a musical instrument

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பொறி மயிர் வாரணம் பொழுது அறிந்து இயம்ப
பொய்கை பூ முகை மலர – புறம் 398/3,4

பொறிகளையுடைய சிறகுகளைக் கொண்ட சேவல்கோழி காலைப் பொழுது விடிந்ததை அறிந்து கூவித் தெரிவிக்க

ஒரு நாளின் காலைப்பொழுதை முரசறைந்து அறிவிக்கும்போது அது இயம்புதல் ஆகிறது

படு கண் முரசம் காலை இயம்ப – மது 232

ஒலிக்கின்ற கண்ணையுடைய முரசம் பள்ளியெழுச்சியாக காலையில் ஒலிக்க

காலையில் தம் மாடுகளை வேலைக்கு நடத்திச் செல்ல வரும் உழவர்கள் ஆசையுடன் அவற்றுடன்
சிறிதுநேரம் உரையாடுவர். அதுவும் இயம்புதல்தான்

இனம் தேர் உழவர் இன் குரல் இயம்ப – அகம் 314/4

சில நேரங்களில் புல்லாங்குழல் ஊதுவதுவும் நம்மை அழைப்பது போலிருக்கும்.
அப்போது மலரைச் சுற்றும் தும்பிகள் எழுப்பும் குரலும் இயம்புதலே என்கிறது பரிபாடல்

ஊது சீர் தீம் குழல் இயம்ப மலர் மிசை
தாது ஊது தும்பி தவிர்பு அல இயம்ப – பரி 22/40, 41

பள்ளத்துச் சேற்றில் சிக்கிக்கொண்ட ஆண்யானையைக் காப்பாற்ற முடியாத பெண்யானை
வேதனையில் அழைப்புவிடுத்து எழுப்பும் ஒலி, மலைக் குகைகளில் சென்றொலிப்பது
இயம்புதல் என்னப்படுகிறது.

தாழ்கண் அசும்பில்
படு கடும் களிற்றின் வருத்தம் சொலிய
பிடி படி முறுக்கிய பெருமரப் பூசல்
விண் தோய் விடரகத்து இயம்பும் – அகம் 8: 9 – 12

இனிமையான அல்லது குழைவான குரலில் அழைப்பதுபோல் அல்லது அறிவிப்பதுபோல்
ஒலித்தலே இயம்புதல்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *