Skip to content

சொல் பொருள்

(பெ) ஆட்கள், வாகனங்கள், விலங்குகள் நடமாட்டத்தால் உருவான/உருவாக்கப்பட்ட பாதை

சொல் பொருள் விளக்கம்

ஆட்கள், வாகனங்கள், விலங்குகள் நடமாட்டத்தால் உருவான/உருவாக்கப்பட்ட பாதை

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

way

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இடிச் சுர நிவப்பின் இயவு கொண்டு ஒழுகி – மலை 20

கல்லை இடித்த சுரத்தின் உச்சியில் உள்ள வழியில் நடந்து

நல் எழில் நெடும் தேர் இயவு வந்து அன்ன – மலை 323

நல்ல அழகினையுடைய நெடிய தேர்கள் வழியிலே ஓடிவந்த தன்மையாக

இரும் களிறு இயல்வரும் பெரும் காட்டு இயவின் – அகம் 298/10

பெருங்களிறு இயங்கும் பெரிய காட்டு வழியில்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *