சொல் பொருள்
(வி) சத்தமிடு,
சொல் பொருள் விளக்கம்
சத்தமிடு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
shriek, as a stork or crane
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அம்ம வாழி தோழி கொண்கன் நேரேம் ஆயினும் செல்குவம்-கொல்லோ கடலின் நாரை இரற்றும் மடல் அம் பெண்ணை அவன் உடை நாட்டே – ஐங் 114/1-4 கேட்பாயாக, தோழியே! நம் தலைவன் நேரில் எதிர்ப்படவில்லையெனினும், நாம் போகலாமா, கடலோரத்திலுள்ள நாரை ஓங்கிக் குரலெழுப்பும் மடல்கள் உள்ள அழகிய பனைகளைக் கொண்ட அவனுடைய நாட்டிற்கு? வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என காணிய சென்ற மட நடை நாரை கையறுபு இரற்றும் கானல் அம் புலம்பு – ஐங் 152/1-3 வெள்ளைக் கொக்கின் குஞ்சு இறந்ததாக அதனைக் காணச் சென்ற இளமையான நடையைக் கொண்ட நாரை செயலற்றுப்போய் ஓங்கிக் குரலெழுப்பும் கடற்கரைச் சோலையுடைய அழகிய நிலப்பகுதியின்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்