சொல் பொருள்
(வி) 1. ஓடு, 2. வருந்து, 3. கெடு, அழி, 4. கெடு, அழி, 5. ஓட்டு, விரட்டு,
சொல் பொருள் விளக்கம்
1. ஓடு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
flee, be distressed, be destroyed, ruined, destroy, ruin, scare away, drive away
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கழி பெயர் களரில் போகிய மட மான் விழி கண் பேதையொடு இனன் இரிந்து ஓட – நற் 242/7,8 கழிநீர் பெருகிப் பரவுகின்ற களர்நிலத்தில் கால்வைத்த இளைய மான் கண்களை அகலவைத்துப் பார்க்கும் தன் அறியாக் குட்டியோடு தன் கூட்டத்தை விட்டு வெருண்டு ஓட வேறுபட்டு இரீஇய_காலை இரியின் பெரிய அல்லவோ பெரியவர் நிலையே – நற் 266/7-9 நீயிர் வேற்று நாட்டுக்குச் செல்லக்கருதி எம்மை இல்லின்கண் இருத்திய காலத்து, யாம் வருந்தியக்கால் பெருங்குடியிலே பிறந்தவர் நிலை பெரிய அல்லவாமன்றோ? – பின்னத்தூரார் உரை இதையும் கயிறும் பிணையும் இரிய சிதையும் கலத்தை பயினான் திருத்தும் திசை அறி நீகானும் போன்ம் – பரி 10/53-55 (கப்பலின்)பாயும், கயிறும், மரங்களும் கெட்டுப்போக, சிதைந்துபோன பாய்மரக்கப்பலை சேர்த்துக்கட்டி சீர்திருத்தும் திசையறிந்து ஓட்டும் நீகானின் செயலைப் போலிருந்தது; அரி கூடு மா கிணை இரிய ஒற்றி – புறம் 378/8 எனது அரித்த ஓசையைச் செய்யும்பெரிய தடாரிப்பறை கண் கிழியுமாறு கொட்டி பாம்பு உடன்று இரிக்கும் உருமோடு – நற் 383/8 பாம்பின் மீது சினந்து விழுந்து கொல்லும் இடியுடன், கவை முட கள்ளி காய் விடு கடு நொடி துதை மென் தூவி துணை புறவு இரிக்கும் – குறு 174/2,3 கவைத்த முள்ளையுடைய கள்ளியின் காய் வெடிக்கும் கடிய ஒலி நெருக்கமான மெல்லிய சிறகுகளையுடைய ஆணும் பெண்ணுமாகிய புறாக்களை வெருட்டி ஓட்டும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்