இருங்குன்றம் என்பது அழகர்மலை
1. சொல் பொருள்
(பெ) அழகர்மலை,
2. சொல் பொருள் விளக்கம்
அழகர்மலை,
மதுரையைச் சுற்றியுள்ள எட்டு குன்றுகளில் எண்ணாயிரம் சமணர்கள் வாழ்ந்ததாகக் கூறுவர்.
அவற்றுள் ஒன்று இந்த இருங்குன்றம்,. இன்று இது அழகர்கோயில், அழகர்மலை, திருமாலிருஞ்சோலை என அழைக்கப்படுகிறது
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
azhagarmalai
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தாங்கும் நீள் நிலை ஓங்கு இருங்குன்றம்/நாறு இணர் துழாயோன் நல்கின் அல்லதை - பரி 15/14,15 தாங்கும் பெரிய நிலைமையையுடைய புகழ் அமைந்த இருங்குன்றம் என்ற திருமாலிருஞ்சோலை அன்பு அது மேஎய் இருங்குன்றத்தான்/கள் அணி பசும் துளவினவை கரும் குன்று அனையவை - பரி 15/53,54 யாம தன்மை இ ஐ இருங்குன்றத்து/மன் புனல் இள வெயில் வளாவ இருள் வளர்வு என - பரி 15/26,27 இருங்குன்றத்து அடியுறை இயைக என - பரி 15/65 இருங்குன்று என்னும் பெயர் பரந்ததுவே - பரி 15/35 கடந்து அட்டான் கேழ் இருங்குன்று/தையலவரொடும் தந்தாரவரொடும் - பரி 15/45,46
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்