சொல் பொருள்
இரும்புக்கடலை – கடினம்
சொல் பொருள் விளக்கம்
கடலை விரும்பியுண்ணும் உண்டியாம் நிலக்கடலை, (மணிலாக் கொட்டை) என்பது. கொண்டைக்கடலை வடிவிலே செய்யப்பட்டது இரும்புக் கடலை. அதனை வாயிலிட்டு மென்றால் பல் என்னாம்? பல்லை உடைக்கும் இரும்புக் கடலை செய்வார் இல்லை. அப்படி ஒருவர் செய்து தின்னச் சொன்னால் எப்படி இருக்கும்? இனியதும் எளியதும் பொருள் நயம் மிக்கதுமாம் பாடல்கள் பாடுவதை விடுத்து பொருட்பயன் இல்லாமல் கடுமையாக அமைந்த பாக்களை இயற்றுவது ‘இரும்புக் கடலை’ செய்து விற்பது போன்றதாம். பயனற்ற செயல் மட்டுமன்றி மொழியைப் பாழாக்கும் செயலுமாம் என்பதைச் சொல்வது இரும்புக் கடலை.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்