சொல் பொருள்
இரும்புலி – பெரும்புலி
சொல் பொருள் விளக்கம்
இரும்புலி – பெரும்புலி. சிறுபுலி (சிறுத்தை)யினின்று பிரித்துணரவே பெரும்புலி என்ற பொருளில் இரும்புலி என்று பல பாடல்களில் வழங்கினர். இன்றும் பேச்சு வழக்கிலும் கன்னட மொழியிலும், கொலாமி, கடபர் மொழிகளிலும் பெரும் புலி என்றும் பெத்தபுலி என்றும், தெலுங்கில் பெப்புலி என்றும் வரிப்புலிக்குப் பெயர்கள் வழங்கி வருவது சங்ககாலப் பெயரான இரும்புலியுடன் ஒத்து வருவது வியப்பைத் தருகின்றது. மலையாளத்தில் பொறியுடைய புலியைக் குறிக்கப் ‘புள்ளிப்புலி’ என்றே வழங்குகின்றனர். வரிப்புலியைக் கடுவாய் என்று வழங்குவது போல் அழைக்கின்றனர். கொலாமி மொழியிலும் ‘கெடியாக்’ என்று வரிப்புலியை அழைப்பதும் கவனிக்கத் தக்கது. (சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம். 259)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்