Skip to content

சொல் பொருள்

(வி) 1. கடந்து செல், 2. போ, நீங்கு, 3. வரம்புகட, 4. மிகு, 5. மரணமடை

சொல் பொருள் விளக்கம்

1. கடந்து செல்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

pass over, go beyond, leave, depart, transgress, excel, surpass, die

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

செழும் பல் குன்றம் இறந்த என் மகளே – ஐங் 372/4

செழித்த பலவான குன்றுகளைக் கடந்து சென்ற என் மகள்தான்

இடை கொண்டு பொருள்_வயின் இறத்தி நீ என கேட்பின்
உடைபு நெஞ்சு உக ஆங்கே ஒளி ஓடற்பாள்-மன்னோ – கலி 10/8,9

பிரிவினை மேற்கொண்டு, பொருளுக்காகப் போகிறாய் நீ என்று கேள்விப்பட்டால்
உடைந்த நெஞ்சம் வருந்திச் சோர்வுற, தன் அழகு கெடுவாள் அன்றோ

எண் இறந்த புகழவை எழில் மார்பினவை – பரி 1/63

எண்ணிலடங்காப் புகழினைக் கொண்டுள்ளாய்! எழிலான மார்பினைக் கொண்டுள்ளாய்

இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்-மின் – கலி 9/22

மிக உயர்ந்த கற்பினையுடையவளுக்காக வருத்தம் கொள்ளாதீர்!

குழவி இறப்பினும் ஊன் தடி பிறப்பினும்
ஆள் அன்று என்று வாளில் தப்பார் – புறம் 74/1,2

பிள்ளை மரணமடைந்து பிறந்தாலும், தசைத்தடியாகிய மணை பிறநதாலும்
அவற்றையும் ஆள் அல்ல என்று கருதாது வாள் ஓக்குதலில் தவறார்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *