சொல் பொருள்
(வி) சீவு, வழி
சொல் பொருள் விளக்கம்
சீவு, வழி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
scrape off
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கழுதில் சேணோன் ஏவொடு போகி இழுதின் அன்ன வால் நிணம் செருக்கி நிறம் புண் கூர்ந்த நிலம் தின் மருப்பின் நெறி கெட கிடந்த இரும் பிணர் எருத்தின் இருள் துணிந்து அன்ன ஏனம் காணின் முளி கழை இழைந்த காடு படு தீயின் நளி புகை கமழாது இறாயினிர் மிசைந்து – மலை 243-249 காவற்பரண் மீது உயரத்தில் இருப்பவன் ஏவிவிட்ட அம்போடு ஓடிப்போய், வெண்ணெய் போன்ற வெண்மையான கொழுப்பு (அம்பு தைத்த இடத்தில்)மிகுதியாய் வெளிவர, மார்பில் புண் ஏற்பட்டு, மண் தின்ற (மண்ணைத்தோண்டியதால் தேய்ந்துபோன)கொம்போடு, 245 வழியை விட்டு விலகிக் கிடக்கின்ற, கரிய சொரசொரப்புள்ள கழுத்தினையுடைய, இருட்டை வெட்டிப்போட்டதைப் போன்ற காட்டுப்பன்றியைக் கண்டால், (முற்றிக்)காய்ந்துபோன மூங்கில்கள் (ஒன்றோடொன்று)உரசிக்கொண்டதால் காட்டில் உண்டான தீயில் அடர்ந்த புகை வீசாமல், வாட்டி மயிர்போக வழித்துவிட்டு (வெந்ததை)உண்டு – இறாவுதல் – தீயின் வாட்டி மயிர் போகச் சீவுதல் – பொ.வே.சோ.உரை விளக்கம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்