சொல் பொருள்
(பெ) 1. ஒளி, பிரகாசம், 2. பயிற்சிக்குக் குறிபார்த்து எய்யும் இலக்கு,
சொல் பொருள் விளக்கம்
இலக்கு- குறி. இலக்கு- இலக்கம். போர் மறவர் வேல் எறிந்து பழகுவதற்குக் குறிமரமாக நிறுத்தப்படும் கம்பம் இலக்கம் எனப்படும். (திருக்குறள் மரபுரை. 627)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
light, brightness
target
Lakh
வேர்ச்சொல்லியல்
இது lakh என்னும் ஆங்கில சொல்லின் மூலம்
இது லக்ஷம் என்னும் சமற்கிருத சொல்லின் மூலம்
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இரு வேறு மண்டிலத்து இலக்கம் போல – பரி 13/8 இரு வேறுபட்ட ஞாயிறு, திங்கள் ஆகியவற்றின் பிரகாசத்தைப் போல தோல், துவைத்து அம்பின் துளை தோன்றுவ நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன – புறம் 4/5,6 கேடயங்கள், ஒலித்துத் தைத்த அம்புகளால் துளை பெற்றன தவறாமல் அம்பெய்த இலக்குகள் போன்றன
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு மூலச்சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்