Skip to content

சொல் பொருள்

(பெ) மாவிலங்கை எனப்படும் ஊர்,

சொல் பொருள் விளக்கம்

மாவிலங்கை எனப்படும் ஊர்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

the city called ilangkai the great.

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நறு வீ நாகமும் அகிலும் ஆரமும்
துறை ஆடு மகளிர்க்கு தோள் புணை ஆகிய
பொரு புனல் தரூஉம் போக்கு அரு மரபின்
தொன் மா இலங்கை கருவொடு பெயரிய
நன் மா இலங்கை மன்னருள்ளும் – சிறு 116-120

நறிய பூக்களையுடைய சுரபுன்னையையும், அகிலையும் சந்தனத்தையும்
(நீராடும்)துறையில் குளிக்கும் மகளிருடைய தோள்களுக்குத் தெப்பமாகும்படி
(கரையை)மோதுகின்ற நீர் கொணர்ந்து தருகின்ற அழித்தற்கு அரிய முறைமையினையுடைய,
பழைய, பெருமை மிக்க இலங்கையின் பெயரை (தான்)தோன்றிய காலத்திலேயே (தனக்குப்)பெயராகவுடைய
நல்ல பெருமையையுடைய இலங்கை(யை ஆண்ட) அரசர் பலருள்ளும்,

இங்கு பாடப்படும் மன்னன் ஓய்மாநாட்டு நல்லியக்கோடன் ஆவான். இவனது நாடு ஓய்மாநாடு. இதில் உள்ள
ஊர்களில் மாவிலங்கையும் ஒன்று. நல்லியக்கோடன் பெருமாவிலங்கைத் தலைவன் என்று சிறப்பித்துக்
கூறப்படுகிறான். எனவே இது அவனுடைய தலைநகராகலாம் என்பர். ஆனால் அவன் கிடங்கில் கோமான்
என்றும் கூறப்படுகிறான். எனவே இந்த மாவிலங்கையே, கிடங்கில் என்றும் அழைக்கப்பட்டது என்பர்.
ஓய்மாநாடு என்பது இன்றைய திண்டிவனம் பகுதியாகும்.

நெல் அமல் புரவின் இலங்கை கிழவோன்
வில்லி ஆதன் கிணையேம் பெரும – புறம் 379/6,7

நெற்பயிர் நெருங்கிய விளைவயல்களையுடைய மாவிலங்கை என்னும் ஊர்க்குத் தலைவனான
ஓய்மான் வில்லியாதனுக்குக் கிணைப்பொருநராவோம் பெருமானே!

இங்குக் கூறப்படும் வில்லி ஆதன், ஓய்மான் வில்லியாதன் எனப்படுவான். எனவே இவன் ஓய்மான்
நல்லியக்கோடனின் வழித்தோன்றலாவான்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *