சொல் பொருள்
இலஞ்சியம் – அருமை , அழகு
சொல் பொருள் விளக்கம்
இலஞ்சி என்பது பன்னிற மலர்கள் வனப்புறத் திகழும் கண்கவர் நீர்நிலையாம். ஏரி, குளம், கண்வாய் என்பவற்றினும் எழில் வாய்யதது இலஞ்சி. ஆகலின் தேவர்களால் அமைக்கப் பட்டது எனப்புனைந்து கூறும் தொன்மக்கதைகள் உள வாயின. இலஞ்சியின் அழகும் அருமையும் இலஞ்சியம் என்னும் சொல்லை உண்டாக்கி அதற்கு அப்பொருள்களையுண்டாக்கின. ‘இலஞ்சியமாக ஒரே ஒரு பிள்ளை; ‘நீ ஒருவன் தான் இலஞ்சியமாக இருக்கிறாயா?’என்னும் வழக்குகளால் இலஞ்சியத்தின் அருமை விளங்கும். அரியது அழகியதுமே யன்றோ! இலஞ்சியம் எனப் பெயருடையார் உளர்.
இது ஒரு வழக்குச் சொல்
பார்க்க இலஞ்சி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்