சொல் பொருள்
இலை, புளி வேம்பு முதலியவற்றின் இலை
சொல் பொருள் விளக்கம்
(1) இலை, புளி வேம்பு முதலியவற்றின் இலை; தாள், நெல் புல் முதலியவற்றின் இலை; தோகை, சோளம் கரும்பு முதலியவற்றின் இலை; ஓலை, தென்னை பனை முதலியவற்றின் இலை. (சொல் கட். 66.)
(2) இலைகளை நால்வகையாக வகுத்து,
வேம்பும் வாழையும் போல மெல்லிதாய் இருப்பதை இலை என்றும்,
நெல்லும் புல்லும் போலத் தாளை (தண்டை) ஒட்டி, நீண்டு சுரசுரப்பாக இருப்பதைத் தாள் என்றும்,
சோளமும் கரும்பும், போலப் பெருந்தாளாக இருப்பதைத் தோகை என்றும்,
தென்னையும் பனையும் போலத் திண்ணமாய் இருப்பதை ஓலை என்றும் வழங்கினர். (கழகப் பொன்விழா மலர். 49.)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்