சொல் பொருள்
இலை – ஒரு காம்பிலோ ஓர் ஈர்க்கிலோ உள்ள இலக்கு இலையாம்.
தழை – குச்சி கொப்புகளில் அமைந்துள்ள இலைத் தொகுதி தழையாகும்; குழை என்பதும் அது.
சொல் பொருள் விளக்கம்
ஒரு காம்பில் உள்ளது வெற்றிலை; ஓர் ஈர்க்கில் பல இலக்காக உள்ளவை வேப்பிலை புளியிலை போன்றவை.
தழை, குழை என்பவை ஆடு தின்னுவதற்குக் கட்டுனவும், உரத்திற்குப் பயன்படுத்துவனவுமாம். ‘தழையுரம்’ என்பதும் ‘குழை மிதித்தல்’ என்பதும் வேளாண் தொழிலில் பெருக வழங்குவன.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்