சொல் பொருள்
இலைவயம்-அறக்கொடை
சொல் பொருள் விளக்கம்
மதிக்கத்தக்க பெருமக்களுக்கு வெற்றிலையில் வைத்துப் பணக்கொடை புரிவது வழக்கம். இலையின்வயமாக வழங்கப் படுதலின் இலைவயமாய்ப் பின்னர் இலவயமாய் அதன் பின்னர் இலவசமாய் வழங்கலாயிற்றாம். இப்பொழுது காசில்லாமல் கொடுக்கும் எதுவும் ‘இலவசம்’ என வழங்கப்படுகின்றது. பெரியவர்களுக்குத் தருதல், ‘காணிக்கை, கையுறை, அடியுறை, தட்சணை’ என இது கால் வழங்குகின்றது. ‘இலவசம்’ என்பது தன் பொருளில் இழிந்து விட்டதால் ஏற்பட்ட இறக்கம் இஃதாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்