சொல் பொருள்
(வி) 1. வழுக்கி விழு, 2. துன்பப்படு, 3. நழுவு, நழுவவிடு, தவறவிடு (பெ) 4. வழுக்கு நிலம், 5. இழிவு, களங்கம்,
சொல் பொருள் விளக்கம்
1. வழுக்கி விழு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
slip and fall down, suffer pain, lose, slippery ground, disgrace, blemish
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இன்னா ஏற்றத்து இழுக்கி முடம் கூர்ந்து – அகம் 107/14 (சரியில்லாத ஏற்றமான வழியில் வழுக்கிவிழுந்து மிக்க முடமாகி) எய் தெற இழுக்கிய கானவர் அழுகை – மலை 301 (முள்ளம்பன்றி தன் முள்களால் தாக்க, அதனால் துன்பப்பட்ட கானவரின் அழுகையும்) கலை தொட இழுக்கிய பூ நாறு பலவு கனி – குறு 90/4 (ஆண்குரங்கு தொட்டவுடன் நழுவிவிழுந்த பூ மணக்கும் பலாப்பழம்) இன் களி மகிழ் நகை இழுக்கி யான் ஒன்றோ – புறம் 71/16 (இனிய செருக்கையுடைய மகிழ்ச்சியைத் தவறவிட்டவனாகி) நூழிலும் இழுக்கும் ஊழ் அடி முட்டமும் – குறி 258 (சிக்குள்ள கொடிகளும், வழுக்கு நிலமும், முட்டான வழிகளும்)
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்