சொல் பொருள்
(வி) கொஞ்சம் கொஞ்சமாக மேலே/முன்னே செல்லுதல்
2. இவன், இவள் – மரியாதைப் பன்மை,
சொல் பொருள் விளக்கம்
கொஞ்சம் கொஞ்சமாக மேலே/முன்னே செல்லுதல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
ascend, move forward
This person, used as an honorific term of reference;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இரையைப் பிடிப்பதற்காக, முன்னங்கால்களை வளைத்துக்கொண்டு முதலை ஊர்ந்து போகிறதே அதுவே இவர்தல். இரை தேர்ந்து இவரும் கொடும் தாள் முதலையொடு – மலை 90 பீர்க்கங்கொடிகள் நரம்புகளால் (tendrils) இறுகப்பிடித்துக்கொண்டு மேலே ஏறுகின்றனவே அதுவும் இவர்தல். பீர் இவர் வேலி பாழ் மனை நெருஞ்சி – பதி 26/10 செங்குத்தான மலைப்பகுதியில் சிங்கங்கள் காலால் பற்றிக்கொண்டு ஏறுகின்றதுவும் இவர்தலே குன்ற இறுவரைக் கோண்மா இவர்ந்தாங்கு (கலித். 86, 32). (இறுவரை = செங்குத்தான மலைப்பகுதி) வறண்டு கிடந்த ஆற்றில் புதிதாய்ப் பாயும் வெள்ளம் ஊர்ந்து ஊர்ந்து செல்வதுவும் இவர்தலே! இரும் கடற்கு ஊங்கு இவரும் யாறு என தங்கான் – பரி 16/27
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்