சொல் பொருள்
(பெ) 1. கொடை, 2. பொன், 3. காடைப் பறவை,
சொல் பொருள் விளக்கம்
(1) அஃதாவது புகழைக் கருதியாயினும் மறுமைக்கு உறுதி வேண்டி ஆயினும் ஏற்கின்ற பேர் முகங்கண்டு மகிழ்ச்சியாகக் குளிர்ந்த சொல்லுடனே தனக்கு இயன்ற மாத்திரம் மாறாமற் கொடுப்பதாம். (நாலடி. ஈகை. தருமர்.)
(2) வறியராயினார் யாவராயினும் யாதானும் ஒன்றை வேண்டி வந்தால் அவர் தம் வறுமை கூறுவதன் முன்னேஅறிந்து தமக்கு இயன்றபடி கிருபையினாலே உவந்து கடுகக் கொடுத்தலும், அறம் புகழ் என்பது கருதிக் கொடுத்தலும் ஆகிய கொடை. (நாலடி. ஈகை. பதுமனார்.)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
gift, grant, gold, quail
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தண்டா ஈகை நின் பெரும் பெயர் ஏத்தி – பெரும் 460 குறையாத கொடைக்குணம் உள்ள உன் புகழ்மிக்க பெயரைப் போற்றி இயல் அணி பொலிந்த ஈகை வான் கழல் – குறி 126 இயற்கையான அழகால் பொலிவுபெற்ற பொன்னால் ஆன உயர்ந்த வீரக்கழல் ஈகை போர் கண்டாயும் போறி – கலி 95/12 காடைகளின் சண்டையைப் பார்த்தவள் போல் இருக்கிறாய்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்