சொல் பொருள்
(வி) 1. செறிவாக அமைந்திரு,
2. கூடு
3. நிறைந்திரு, மிகு
(வி.அ) 4. இந்த இடத்தில்,
சொல் பொருள் விளக்கம்
1. செறிவாக அமைந்திரு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
to get to be a compact mass, as the atoms of earth;
come together
abound
in this place
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி வளம் தலைமயங்கிய நனம் தலை மறுகின் – பட் 192,193 அரியனவும்,பெரியனவுமாகிய பொருள்கள் நிலன் நெளியும்படி செறிவாகத் திரண்டு செல்வம் தலைதெரியாது மயங்கிக் கிடக்கும் அகன்ற இடங்களையுடைய தெருவினையும் இன மீன் ஆர்கை ஈண்டு புள் ஒலி குரல் – நற் 267/10 கூட்டமாகிய மீன்களைத் தின்பதற்கு வந்து கூடுகின்ற பறவைகள் ஒலிக்கின்ற குரல் இணர் ததை கடுக்கை ஈண்டிய தாதின் – அகம் 393/15 கொத்துக்கள் நிறைந்த கொன்றையின் நிறைந்த பூந்தாது போல குவளை உண்கண் இவள் ஈண்டு ஒழிய – நற் 205/6 குவளை மலர் போன்ற மையுண்டகண்களையுடைய இவள் இவ்விடத்தில் நிற்குமாறு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்