சொல் பொருள்
(ஏ.வி.மு) கொடுப்பாய்
மூங்கிலை ஈத்தை என்பது மதுரை மாவட்ட வழக்கு
வலுவற்ற அடியுடைய தட்டையை ஈத்தை என்பது முகவை மாவட்ட வழக்கு
கதிர் விட்டும் மணிபிடியாப் பயிரை ஈத்தை என்பதும் முகவை வழக்கு.
சொல் பொருள் விளக்கம்
உள்வயிரம் இல்லாத புல்லினப் பயிர்களின் அடியை ஈத்தை என்பர். மூங்கிலை ஈத்தை என்பது மதுரை மாவட்ட வழக்கு. வலுவற்ற அடியுடைய தட்டையை ஈத்தை என்பது முகவை மாவட்ட வழக்கு. மெலிந்தவனை ஈத்தை என எள்ளலும் இவ்விழிப்பட்டதே. கதிர் விட்டும் மணிபிடியாப் பயிரை ஈத்தை என்பதும் முகவை வழக்கு.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
hand over
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆய்இழாய் தாவாத எற்கு தவறு உண்டோ காவாது ஈங்கு ஈத்தை இவனை யாம் கோடற்கு – கலி 86/29,30 “அழகிய அணிகளை அணிந்தவளே! எத் துன்பமும் செய்யாத என்மேல் தவறுண்டோ? உன்னிடம் வைத்துக்கொள்ளாமல் இங்கு கொடு இவனை நான் கையிலெடுத்துக்கொள்வதற்கு”; – ஈத்தை – ஈவாயாக – நச்.உரை – பெ.பு.விளக்கம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்