Skip to content

சொல் பொருள்

ஈயோட்டல் – விலையாகாமை

சொல் பொருள் விளக்கம்

ஈயோட்டல் நலப்பாடு (சுகாதாரம்) கருதிய செயல், அதனினும் ஈக்கு இடம் கொடாமல் இருப்பது மிக நலப்பாடு. நீர்ப்பொருள் இனிப்புப் பொருள் ஆகியவற்றையே ஈ நாடித் தேடிவரும். அவற்றை ஓட்டாவிட்டால் மொய்த்துக்கிடக்கும். அதனைக் காண்பவர் அப்பொருளை வாங்க மாட்டார். விலை போகா அப்பொருளை ஈவிட்டு வைக்குமோ? ஈயோட்டுவதே விற்பவர்க்கு வேலையாகிப்போகும் ; அதனால் வணிகம் நன்றாக நடைபெறாத கடைக்காரரை ஈயோட்டுகிறார் என்பது வழக்க மாயிற்று. பின்னர் விற்பனை நடைபெறாமல் படுத்துவிட்ட எந்தக் கடையும் ஈயோட்டலாயிற்று.

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *