ஈர்ந்தை என்பது ஈஞ்சூர்
1. சொல் பொருள்
(பெ) ஈர்ந்தூர் எனப்படும் சங்க கால ஊர்,
2. சொல் பொருள் விளக்கம்
ஈர்ந்தூர் எனப்படும் சங்க கால ஊர்,
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
an ancient city called Eernthur
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
ஈர்ந்தையோனே பாண் பசி பகைஞன் – புறம் 180/7 ஈர்ந்தை என்னும் ஊரின்கண் இருந்தான் பாணரது பசிக்குப் பகைவனாயவன் ஈர்ந்தூர்க் கிழான் கோயமான் என்பவனைப் பற்றிக் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடிய பாடலில் இவ்வூர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈர்ந்தூர் என்பது இக்காலத்தே கொங்குநாட்டில் ஈஞ்சூர் என வழங்குகிறது என்பார் ஔவை.சு.து.அவர்கள்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்