சொல் பொருள்
(வி) 1. உயர், 2. மனம் மகிழ்
சொல் பொருள் விளக்கம்
1. உயர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
ascend, soar upward;
be glad
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பருந்து இருந்து உகக்கும் பல் மாண் நல் இல் – மது 502 பருந்துகள் (இளைப்பாறி)இருந்து (பின்னர்)உயர்ந்தெழும் பல(தொழிலால்) சிறந்த நல்ல இல்லம் உகத்தவை மொழியவும் ஒல்லாள் மிக கலுழ்ந்து – நெடு 156 (அவள் மனம்)மகிழக்கூடிய சொற்களைக் கூறவும் (அதனை)ஏற்காதவளாய் மிகவும் கலங்கி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்