சொல் பொருள்
(பெ) உகாய், ஓமை மரம்,
சொல் பொருள் விளக்கம்
உகாய், ஓமை மரம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Tooth-brush tree, Salvadora persica;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புறாவின் முதுகைப் போன்ற புல்லிய அடிமரத்தை உடையது இறால்மீனின் முட்டையைப் போன்ற பழங்களை உடையது புறவு புறத்து அன் ன புன் கால் உகாஅத்து இறவு சினை அன்ன நளி கனி உதிர – குறு 274/1,2 புறாவின் முதுகைப் போன்ற புல்லிய அடியையுடைய உகாய் மரத்தின், இறால்மீனின் முட்டைகளைப் போன்ற செறிந்த பழங்கள் உதிரும்படியாக உச்சிப்பகுதி உலர்ந்துபோய்க் கிடக்கும். மிளகு பெய்து அனைய சுவைய புன்காய் உலறு தலை உகாஅய் சிதர் சிதர்ந்து உண்ட – நற் 66/1,2 மிளகினைப் பெய்து சமைத்தது போன்ற சுவையை உடைய புல்லிய காய்களை, உலர்ந்த உச்சிக்கிளைகளைக் கொண்ட உகாய் மரத்தில், வண்டுகளை விலக்கிவிட்டு உண்டு, இதன் காய் குயிலின் கண் போன்று இருக்கும். கனி மணிநிறக் காசு போன்று இருக்கும். குயில் கண் அன்ன குரூஉ காய் முற்றி மணி காசு அன்ன மால் நிற இரும் கனி உகாஅ மென் சினை உதிர்வன கழியும் – அகம் 293/6-8 குயிலின் கண்ணைப் போன்ற நிறமுடைய காய் முற்றி அழகிய நீலநிற மணிக்காசு போன்ற பெருமை பொருந்திய நிறமுடைய பெரிய கனி உகாவின் மெல்லிய கிளைகளினின்றும் உதிர்ந்து ஒழியும் பார்க்க ஓமை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்