சொல் பொருள்
(வி) 1. வருத்து, 2. அழி, கெடு, 3. சினமூட்டு, 4. செலுத்து,
சொல் பொருள் விளக்கம்
1. வருத்து,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
afflict, damage, spoil, infuriate, drive, push on vigorously
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஓம்புநர் அல்லது உடற்றுநர் இல்லை – மலை 426 (உம்மைப்)பேணுபவர் அன்றி, வருத்துபவர்கள் இல்லை; தேன் இமிர் நறும் தார் வானவன் உடற்றிய ஒன்னா தெவ்வர் மன் எயில் போல – அகம் 381/15,16 வண்டுகள் ஒலிக்கும் நறிய மாலையினையுடைய சேரன் அழித்த மாறுபட்ட பகைவரது பொருந்திய மதில் போல ஓவாது கூஉம் நின் உடற்றியோர் நாடே – புறம் 4/19 இடைவிடாமல் கூப்பிடும் உன்னைச் சினப்படுத்தியவருடைய நாடு மா உடற்றிய வடிம்பு – பதி 70/2 குதிரைகளைப் போரிடுவதற்குச் செலுத்திய காலின் முன்பகுதியையும்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்