சொல் பொருள்
(பெ) உடை,உடுக்கின்ற ஆடை
சொல் பொருள் விளக்கம்
உடுக்கின்ற ஆடையை உடுக்கை என்றார் திருவள்ளுவர்…. உடுக்கை என்பதும் உடுப்பு என்பதும் ஒரே அடிச் சொல்லினின்றும் பிறந்தனவே ஆயினும் அவற்றின் இடையே பொருள் வேற்றுமை உண்டு. இடுப்பில் உடுத்தும் உடை ‘உடுக்கை’ என்றும், மேலே அணியும் சட்டை ‘உடுப்பு’ என்றும் இக்காலத்தில் வழங்கப் பெறுகின்றன. (தமிழகம் அலையும் கலையும். 174.)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
clothing
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குன்றி ஏய்க்கும் உடுக்கை – குறு 0/3 குன்றிமணியைப் போன்ற உடை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்