சொல் பொருள்
உடைமை சார்பொருளும் புறப்பொருளுமே சுட்டின.
சொல் பொருள் விளக்கம்
உடைமை என்ற சொல் தமிழில் உடை என்பதினின்றும், அவ் உடை என்பதும் உடு என்பதினின்றும் பிறந்துள்ளதனைக் காணலாம். உடை என்பது உடலுக்குப் புறம்பாக அதனொடு சார அணியப்படும் ஆடை. உடுத்தல் சூழ்வரச் சுற்றி வரிதல். உடைமை இதனால் சார்பொருளும் புறப்பொருளுமே சுட்டின.
உடை என்பது போல உடல் என்பது ‘உடு’ என்ற வேர்ச் சொல்லில் இருந்து பிறந்ததே. உண்மையில் உடு என்ற வினைப் பகுதியுடன் ஐ, அல் ஆகிய தொழிற் பெயர் விகுதிகள் சேர்ந்த வடிவங்களே இவ்விரு சொற்களும். உடலும் உடையும் ஒருவர்க்குச் சார் பொருள்கள். முன்னது அகச் சார்பு. பின்னது புறச்சார்பு. ஆனால் உடல் அகச் சார்பானால் உடை புறச் சார்பானால், உடைமை புறப்புறச் சார்பு என்பது தெளிவு.
(திருக்குறள். மணிவிளக்கவுரை. III. 248.)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்