சொல் பொருள்
உதவாக்கரை – பயனற்றவன்
சொல் பொருள் விளக்கம்
நீரை நெறிப்படுத்தி நிறுத்துவதற்கும் ஓடச் செய்வதற்கும் பயன்படுவது கரை. அக்கரை உதவும் கரையாகும். அச்செயலைச் செய்யப் பயன்படாத கரைகளும் உண்டு. அவை நீர் வந்தவுடனே கசிந்தும் கரைந்தும் உடைப்பெடுத்தும் போய்விடும். அவை உதவாக்கரை. அப்படியே குடும்பத்துக்கு உதவும் மகன். உதவும் கரைபோன்று நலம் செய்வான். உதவாத மகன், உதவாக் கரையாக இருந்து, இருப்பதையெல்லாம் கெடுத்தொழிவான். உதவாத கரைபோல்வானை உதவாக் கரை என்பது வழக்கு.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்