சொல் பொருள்
உதிர்த்தல் – மானங்கெடல்
சொல் பொருள் விளக்கம்
“அவள் உதுத்துப்போட்டவள், எல்லாம் உதுத்திட்டுத் திரிகிறாள்” என்பவை ஒழுக்கமில்லாதவள்; மானங்கெட்டவள் என்னும் பொருளில் சொல்லப்படும் பழிப்புரை. ‘உதிர்த்தல்’ என்பது பூவுதிர்த்தல், காயுதிர்த்தல் போல இருப்பதை இழந்து விட்டதை உணர்த்துவதாம். பெண்மைக்கு உரியதெனக் கருதும் பண்புகளை இல்லாமல் செய்து விட்டவள் என்பதே ‘உதிர்த்தவள்’ என்பதன் பொருளாம். ஆண்பாலுக்கும் இவ்வசை மொழியுண்டு “அவன் உதுத்துப் போட்டவன்” என்பதும் வழக்கே. பருப்பொருள் உதிர்தலைக் குறித்த இது, பண்பு இழப்பைக் குறிப்பதாக வழக்கிற்கு வந்தது.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்