Skip to content

உத்தரம் தக்கணம்

சொல் பொருள்

வடதிசைக்கு உத்தரம் என்றும், தென் திசைக்குத் தக்கணம் என்றும் பெயர்;உ = உயர்வு; தக்கு= தாழ்வு.

சொல் பொருள் விளக்கம்

ஒரு காலத்தில் பனிமலை கடலுக்குள் முழுகியும் தென்பெருங் கடல் குமரிமலையைக் கொண்ட உயர் நிலமாயுமிருந்ததினால், நாவலந்தேயத்தில் வடபால் தாழ்ந்தும் தென்பால் உயர்ந்தும் இருந்தது. பனிமலை எழுந்து குமரிமலை முழுகியபின், வடபால் உயர்ந்தும் தென்பால் தாழ்ந்தும் இருக் கின்றது. இதனால் வடதிசைக்கு உத்தரம் என்றும், தென் திசைக்குத் தக்கணம் என்றும் பெயர். உ = உயர்வு; தக்கு= தாழ்வு; தரம் அணம் என்பன ஈறுகள். உகப்பு, உச்சி, உம்பர், உயரம், உன்னு, உன்னதம் முதலிய சொற்களில் உகரவடி உயர்வு குறித்தலையும், தக்குத் தொண்டை என்னும் உலக வழக்கில், தக்கு என்பது தாழ்வு குறித்தலையுங் காண்க. தரம் என்பது நிலை எனினும் ஒக்கும். (சொல். கட். 18.)

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *