சொல் பொருள்
(பெ) 1. பாம்பின் படத்திலுள்ள பொறி, 2. (பெண்கள்) தலையில் அணியும் ஒரு ஆபரணம், நெத்திச்சுட்டி,
சொல் பொருள் விளக்கம்
1. பாம்பின் படத்திலுள்ள பொறி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Spots on the hood of the cobra.
a head ornament
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கேழ் கிளர் உத்தி அரவு தலை பனிப்ப – நற் 129/7 நல்ல நிறம்பொருந்திய படத்தில் புள்ளிகளையுடைய பாம்பின் தலை நடுங்குமாறு நூல் அமை பிறப்பின் நீல உத்தி கொய்ம் மயிர் எருத்தம் பிணர் பட பெருகி – அகம் 400/5,6 புரவி நூல் கூறும் இலக்கணம் அமைந்த நீல மணியால் ஆகிய நெற்றிச்சுட்டியினையுமுடைய கொய்யப்பெற்ற மயிர் பொருந்திய பிடரி சொரசொரப்பு உண்டாகப் பெருகி தெய்வ உத்தியொடு வலம்புரி வயின் வைத்து – திரு 23 தெய்வ உத்தி, வலம்புரி ஆகிய தலைஆபரணங்களை அதனதன் இடத்தில் வைத்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்